Category Archives: மருத்துவம்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது, நோய்த்தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும்.

ICU – Intensive Care Unit…


ICU equipments

ICU equipments

ICU என்றால் மக்கள் பயப்படத்தான் வேண்டுமா என்ன..?

ICU – intensive care unit என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் விஷேச பாதுகாப்புக்கள் கொண்ட  அறையினுள் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் , வெளியில் உள்ளவர்கள் பலவகையான அச்சத்தை வெளியிடக் காண்கிறோம்.அப்படிப்படையில் அந்த அச்சம் அவசியமன்று.

நோயாளி தீவிர சிகிச்சைக்கும் கண்காணிப்புக்குள்ளும் விஷேச பாதுகாப்பு ஒழுங்குகளுக்குள்ளும் வருகிறார் என்றால் நோயாளின் நிலைமை மிக மோசம் என்று மட்டும் அர்த்தமில்லை. அவருக்கு அத்தகைய ஒரு சூழல் அவசியம் என்றாலும் அது வழங்கப்படலாம்.

Intensive care unit

Intensive care unit

தீவிர விபத்தால் இரத்த இழப்பு , இதயப் பாதிப்பு, மூளை செயலிழத்தல், சுயாதீனமாக சுவாசிக்க முடியாத நிலை மற்றும் இமியுனிற்றி பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகளை ICU அவர்களின் தேவைக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நோயாளி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்படுவதோடு , அவரின் உடல்நிலை குறித்து அடிக்கடி கண்காணிக்கபடும் .  அதற்கேற்ப பிரத்தியோக கருவிகள் அங்கு உள்ளன.

ICU என்றால் மற்றவர்கள் யாரும் பதட்டம் அடைய தேவை இல்லை . மாறாக , நோயாளியும் பிறரும் கூடுதல் தெம்போடு இருக்க வேண்டும் . இதனை அடுத்து , ICU இல் இருந்து வெளியேறுபவர்களுக்கு கூடிய கவனிப்பு தேவைபட்டால் அவர்கள் HDU (high dependency unit) க்கு அனுமதிக்கப்படுவார்கள். அங்கு நோயாளி சட்று தேறிய பின் சாதாரண வாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  அதன் பின் நோயாளி குணமடைந்த பின் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்..!

வயிறு சம்பந்தமான நோய்களும் தீர்வுகளும் …


Stomach Pain

Stomach Pain

  1. வயிற்றுப்புண் போக பாகற்காய்,சுண்டைகாய் நல்ல மருந்து.
  2. வயிற்றுவலிக்கு தண்ணீரில்  சிறிது சுக்கு,பனங்கற்கண்டு கொதிக்கவைத்து சாப்ப்பிட குணமாகும்.
  3. வாய்,வயிற்று புண் நீங்க முட்டைகோஸை வேகவைத்து அந்த நீரை குடிக்கவும்.
  4. வயிறு நோய் எதுவானாலும் சீரகப்பொடியை மோரில் கலந்து சாப்பிடவும்.
  5. அல்சர் குணமாக தினமும் கிரேப் ஜூஸ் சாப்பிட்டு வரவும்.
  6. வயிறுவலி குணமாக வெற்றிலையை விளக்கெண்ணையில் தடவி பின்பு விளக்குத்தீயில் காட்டி ஒத்தனம் கொடுக்கவும்.
  7. வயிற்றுப்புண் வராமல் இருக்க சூடான உணவு, குளிர்பானைகளை தவிர்க்கவும்.
indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing