Author Archives: ulagaarivumaiyam

Surat An-Nas The Mankind


Surat An-Nas The Mankind.

கேரளா சுற்றுப்பயணம்…!


கேரளா என்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர்.

Munnar - Kerala

Munnar – Kerala

01.நேஷனல் ஜாக்ரபிக்கின் ‘டிராவலர்’ பத்திரிக்கையில்  ‘உலகின் பத்து அற்புதங்கள்’ , ‘வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்’ என தெரிவித்துள்ளார் .

02.கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும்,  சிறிய கிராமமாகட்டும்  அது ‘கடவுளின் சொந்த நாடு’என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.
03.கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன.

Boat House

Boat House

04.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும்  சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம்  மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள்.
05.வர்கலா, பேக்கல், கோவளம், மீன்குன்னு, செராய், பய்யம்பலம், ஷங்குமுகம், முழுப்பிலங்காடு உள்ளிட்ட கடற்கரைகள் கேரள பிரதேசத்தை இணையற்ற சுற்றுலா மையமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.
06.கேரளாவின் மயக்கும் உப்பங்கழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலப்புழா, குமரகம், திருவல்லம், காசர்கோட் போன்ற பகுதிகளில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்வில் அதுவரை அனுபவவித்திடாத நொடிகளாகவே பேரின்பத்தை வாரி இறைத்து நகர்ந்து செல்லும்.

Boat Race

Boat Race

07.ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பாரம்பரிய ‘ஸ்நேக் போட் ரேஸ்’ அல்லது பாம்புப் படகுப் போட்டியில் உப்பங்கழிகளின் சலசலக்கும் நீரலைகளை கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளை மெய்சிலிர்க்க வேடிக்கை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எல்லையற்றது.
08.வேம்பநாடு ஏரி, அஷ்டமுடி ஏரி, பூக்கோட் ஏரி, சாஷ்டாம்கொட்டா ஏரி, வீரன்புழா வெள்ளயாணி ஏரி, பரவூர் காயல், மனச்சிரா போன்ற ஏரிகள் கேரளாவின் வளமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த உதாரணங்கள். இதில் வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
09.வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு ஸ்தலமாக மூணார் மலைப்பிரதேசம் அறிப்படுகிறது. மேலும் கேரளாவில் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைவாசஸ்தலங்கள் ஏராளம் நிறைந்து கிடக்கின்றன.

Kerala Culture

Kerala Culture

10.இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன.
11.கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம்.
12.புட்டு, இடியாப்பம், உன்னி அப்பம், பாலடை பிரதமன் (ஒரு வகை பாயசம்), நேந்திரம் பழ சிப்ஸ், மீன் உணவுகள், செவ்வரிசி போன்ற பதார்த்தங்கள் கேரளாவுக்கே உரித்தான உணவு வகைகள்.
13.கேரளாவில் ஹிந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் முக்கிய மதங்களாக விளங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹிந்துக் கடவுளான பகவதி அம்மனுக்கு கேரளா முழுக்க எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன.

Foods Of Kerala

Foods Of Kerala

14.குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோயிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
15.இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் சபரிமலை கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவைதவிர திரிசூரில் உள்ள அயிராணிக்குளம் மஹாதேவா கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவல்லா ஸ்ரீவல்லப கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிற முக்கிய கோயில்களாக கருதப்படுகின்றன.

Kerala Tourism Places

Kerala Tourism Places

16.மலயாட்டூர் தேவாலயம், கொச்சி செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம், போர்ட் கொச்சியில் உள்ள சாண்டா குரூஸ் பெசிலிக்கா, கோட்டயத்தின் செயின்ட் மேரிஸ் போரன்ஸ் தேவாலயம் உள்ளிட்டவை கேரளாவின் பிராதன கிறிஸ்தவ தேவாலயங்களாக கருதப்படுகின்றன.
17.பழயங்காடி மசூதி, மடாயி மசூதி, சேரமான் ஜூம்மா மசூதி, கஞ்சிரமட்டம் மசூதி, மாலிக் தீனர் மசூதி போன்றவை கேரளாவின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்…


இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்டங்களும் இந்திய குழயரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர்கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.

indian penal code

இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக்கல் நிறைந்தவையாகவே அமைந்துள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத்தினருக்;கும் அதற்குரிய தனித்தன்மையை வலியுறுத்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக அமைந்துள்ளது.

பல மாநிலங்களில் திருமணங்கள் பதிவு செய்வது மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அதனால் ஒவ்வொரு சமயத்தினரும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள் :

இந்திய அரசியலமைப்பஜ மற்றும் ஆட்சியியல் சட்டம்

குற்றவியல் சட்டம்

ஓப்பந்தச்சட்டம்

தொழிலாளர் சட்டம்

பொல்லாங்கு குற்றவியல் சட்டம்

குடும்பச் சட்டம்

இந்துச் சட்டம்

இசுலாமியச் சட்டம்

கிருத்துவச் சட்டம்

பொதுச்சட்டம்

தேசியச்சட்டம்

அமலாக்கச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்

குற்றங்களின் வகைப்பாடு

இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்

இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொதுவிளக்கங்கள்

இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்

இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாதுகாபபு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை

இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி

இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள்

இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப்ப+ர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான
ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம்
மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 299 முதல் 377 வரை

1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை

( பிரிவு 299 முதல் 311 ) உள்ளிட்ட வாழ்க்கை

பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை பற்றி.

2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள்

( பிரிவு 312 முதல் 318 )

3.காயப்படுத்துதல் ( பிரிவு 319 முதல் 338 )

4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை

( பிரிவு 339 முதல் 348 )

5.குற்றவியல் தாக்குதல்

( பிரிவு 349 முதல் 358 )

6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத்தல்

( பிரிவு 359 முதல் 374 )

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்

( பிரிவு 375 முதல் 376 )

8. செயற்கை குற்றங்கள்

( பிரிவு 377)

சொத்து தொடர்பான குற்றங்கள்

1. திருட்டு

( பிரிவு 378 முதல் 382 )

2. பலாத்காரம்

( பிரிவு 383 முதல் 389 )

3. திருட்டு மற்றும் கொள்ளை

( பிரிவு 390 முதல் 402)

4. சொத்து குற்றவியல் மோசடி

( பிரிவு 403 முதல் 404 )

5. குற்றவியல் நம்பிக்கை துரோகம்

( பிரிவு 405 முதல் 409 )

6.திருடிய சொத்து பெறுவது

( பிரிவு 410 முதல் 414 )

7. ஏமாற்றுதல்

( பிரிவு 415 முதல் 420 )

8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்

( பிரிவு 421 முதல் 424 )

9. குறும்புகள்

( பிரிவு 425 முதல் 440 )

10. குற்ற மீறல் பற்றிய செயல்கள்

( பிரிவு 441 முதல் 464 )

ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான

குற்றங்கள்

பிரிவு 463 முதல் 489 வரை

சொத்து ( பிரிவு 478 முதல் 489 )

நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை

( பிரிவு 489எ வேண்டும் 489இ)

பிரிவு 490 முதல் 492 வரை

சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்

498 எ கணவன் அல்லது கணவனின் உறவினரால்

துன்புறுத்தல்ஃ

பிரிவு 499 முதல்502 வரை

மான நஷ்ட வழக்குகள்

பிரிவு 503 முதல் 510 வரை

சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு

பிரிவு 511

குற்றம் செய்ய முயல்வது.

சட்ட சீர்திருத்தங்கள் :

1ஃ பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் ஐ{லை 2 2009 முதல் டில்லி உயர் நீதிமன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கான விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தணடிக்க பயன்படுத்த முடியாது என்றது.

2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.

3 பிரிவு 497ன் கீழ் மறறொரு நபர்கள்

மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing