Category Archives: ஆண்கள்

ஆளப்பிறந்தவன்…

ஆண் மகன் யார்…?


Neanderthal Man

Neanderthal Man

ஆண் மகன் என்பவன் தோற்றத்தில் மட்டும் அழகாக இருந்தால் போதாது. ஒருவன் அனைத்து வகையிலும் அழகானவனாக தெரிய வேண்டுமானால் …

‘‘உன் அருகில் இருக்கையில் பாதுகாப்பாய் இருக்கிறேன்’’ என்ற உணர்வை ஒரு பெண்ணுக்குத் ஏற்ப்படுத்தும் பொது ஆண் மகன் சிறந்து நிற்கின்றான் .

தன் நண்பனை ஆபத்திலிருந்து காப்பாற்ற நினைக்கும்போது.

தான் 25 வயதை கடந்து விட்ட பின், தன் பெற்றோர்கள் தான் தனக்கு குழந்தைகள் என்பதை உணரும்போது.

உள்ளத்தை மட்டுமே கண்டு ஒரு பெண்ணிடம் காதல்கொள்ளும்போது.

எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் இடத்தில் களத்தில் இறங்கி உதவி செய்யும் ஈகை மனம் வரும்போது .

தாரத்தை ஏற்க தட்சணை எதுவும் கேட்காமல் தன்மானத்தால் தலை நிமிரும்போது.

தாயின் அன்பையும் தாரத்தின் அன்பையும் தராசில் வைத்து ஒப்பிடாதபோது.

எதற்குமே கலங்காத கண்கள், தான் நேசிக்கும் தன் உறவுகளுக்காக மட்டுமே கலங்கும்போது.

பெண்ணை ஆண் என்ற அதிகாரத்தால் அடக்காமல் , மனதில் வீரனாக, குணத்தில் அன்பாக, செயலில் நேர்மையாக இருக்கும் எல்லா ஆண்களுமே அழகு தான்.

ஆண்கள் பற்றிய சில உண்மைகள்…


Man Always Man

Man Always Man

சொல்லப் போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். மேலும் , எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது.  அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன்னார்கள்? . ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.

2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

Man's Nature

Man’s Nature

3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹோர்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing