சமச்சீர் கல்வி முறை …


 

சமச்சீர் கல்வி முறை  என்பது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறையாகும். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை செயல்படுத்தப் பட்டிருக்கும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, மாநில அளவில் இருந்து வந்த நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகள் ஒன்றாக்கப்பட்டன. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின் கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம்.

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி

வரலாறு :

2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. 2006 தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கையும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.
தாய்மொழிக் கல்வி :

முத்துக்குமரன் தலைமையிலான குழு சமர்ப்பித்த 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக “பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன.” தாய்மொழி கல்வித் திட்டத்தை அரசு கைவிடக் காரணம், அதற்கு மக்களிடம் ஆதரவு இல்லாத சூழல் ஆகும்.[2] இந்தச் சூழலுக்கு காலனித்துவம், பொருளாதாரம், கல்வி வணிக மயப்படுத்தப்படல், அரச கொள்கைகள் என பல காரணங்கள் உண்டு.

வழக்குகள் :

2010-11 கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்திடவும் திமுக தலைமையில் பதவி வகித்த தமிழக அரசு முடிவு செய்ததது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு சமச்சீர் பாடங்கள் தரமானதாக இல்லை என்றும் மறு ஆய்வுக்குப் பின் அவை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சூன் 10, 2011 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது உயர்நீதி மன்றம். இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 13 சூன், 2011 அன்று செய்தது. அவ்வழக்கில் கல்வியாளர்கள் எதிர்த்தரப்பாகத் தங்களையும் விசாரிக்கக் கோரி மனு தொடுத்தனர். இவ்வழக்கில் 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியைத் தொடரச் சொல்லியும் இதர வகுப்புகளுக்குத் தேவையா என நிபுணர்குழு அமைக்குமாறும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர்குழு சமச்சீர்ப் பாடநூல்கள் தரமற்றவை என்று அறிக்கையளித்தது. இதனைக் கொண்டு மாநில அரசு மீண்டும் சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தைக் கைவிட்டது. ஆனால் ஜூலை 18, 2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துமாறு ஆணையிட்டுத் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது எனவும் அறிவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஜூலை 19, 2011 அன்று மேல்முறையீடு செய்தது.  எனினும் இவ்வழக்கில் சமச்சீர்க் கல்வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் எனவும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தரவேண்டும் என்றும் ஆனால், தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சமச்சீர்க் கல்விப் பாடநூல்களைத் தருவதற்கு ஆகஸ்ட் 10 இறுதிநாளாக்கப்பட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிவடைந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.  இறுதித் தீர்ப்பு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், “சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சமச்சீர் பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகப்படுத்துவதற்கான காரணங்கள் :

நான்குவகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் தவிர்ப்பதற்காக இத்திட்டம் கல்வியாளர்களால் ஆராயப்பட்டு அவற்றை நீக்கும் எண்ணத்துடன் அறிமுகப்படுத்தபட்டது.
கருத்துக்களும் எதிர்கருத்துக்களும் :
சார்புக் கருத்துக்கள் :

 

  • ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் (Content) பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம்சங்களைத் தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
  • புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
  • பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு – சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • பாடத்திட்டம், பாடநூல்கள் குறித்து ஒளிவுமறைவின்றி (Transparent Method) பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
  • தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளபடி, பயிற்றுமொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும்.

எதிர்க்கருத்துக்கள் :

  • இப்படிப் பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படுவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதற்குத் தமிழக அரசு எந்த ஒரு தனிப்பட்ட காரணத்தையும் சொல்லவில்லை.
  • இது போன்ற விவாதங்கள் அனைத்து வகைப் பள்ளிகளையும் (வாரிய பள்ளிகளையும்) சேர்ந்தவர்களை கலக்காமல் அரசுப்பள்ளிகளில் கல்வி கற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மட்டும் நடத்தப்பட்டது.
  •  பாடத்திட்டம் என்பது வேறு, அதைக் கற்பித்தல் என்பது வேறு என்பதை கருத்தில் கொள்ளாமல் அரசு எடுத்த நடவடிக்கைள் இது என எதிர்க்கப்பட்டது.
  • பாடத்திட்டம், பாடநூல்கள் என எவையும் எங்கும் ஒளிவு மறைவுடன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • எப்பொழுதும் பயிற்றுமொழியாகத் தமிழ் தொடரவேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை.
Court Orders

Court Orders

நீதிமன்ற வழக்குகள் :

அதிமுக தலைமையிலான அரசு 2011 ல் பதவியேற்றபின் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து ஏனைய வகுப்புகளுக்கு இவ்வருடம் சமச்சீர்கல்வியை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. அதோடு நில்லாமல் பழைய புத்தகங்களை குறுகிய காலத்தில் அச்சடிக்க புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஏற்கெனவே ரூxxx கோடி செலவில் சமச்சீர் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அரசு குழு அமைத்து ஒருவாரகாலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய அறிவுறுத்தியது.

அதனைத்தொடர்ந்து தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவின் பரிந்துரையை உயர்நீதிமன்றம் ஜூலை 18 அன்று நடைபெற்ற அமர்வில் தள்ளுபடி செய்தது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே எல்லா வகுப்புக்கும் அமல்படுத்த ஆணையிட்டது. மேலும் மாணவர்களுக்கான புத்தகங்களை சூலை 22க்குள் விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேசமயம் ஆட்சேபனைக்குரிய பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணைபட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சூலை 19 அன்று மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஷியாம்சுந்தர், மணிமேகலை, சேஷாத்திரி உள்பட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு? தாக்கல் செய்தனர்.

இதன் தீர்ப்பு சூலை 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு தடை வித்திக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை சூலை26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4உடன் முடிந்த தருவாயில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், “சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் வழக்கில் கொண்டுவர வேண்டும்” என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிறுபான்மை மொழிகள் ;

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, கன்னடம், தெலுங்கு போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் வந்தது. அம்மொழிகளும் சமச்சீர் கல்வியில் இடம்பெறவேண்டும் என்று தமுமுக போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ‘உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும் என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.

சமச்சீர் கல்வித்திட்ட தமிழ் பாடப்புத்தகத்துடன் குழந்தைகள்

சமச்சீர் கல்வித்திட்ட தமிழ் பாடப்புத்தகத்துடன் குழந்தைகள்

முதல் பொதுத் தேர்வு:

சமச்சீர்க் கல்வி திட்டத்தின் கீழ் முதன் முதலில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சூன் 4, 2012ல் வெளியாயின. அதில் மாநில அளவில் தஞ்சை மாணவர் பி. ஸ்ரீநாத் முதலிடம் பிடித்தார். இவர் 500க்கு 497 மதிப்பெண் பெற்று இதுவரை யாரும் பெறாத வகையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். நான்கு பாடங்களில் சதமடித்தார்.[11]. இத்தேர்வில் சென்னையைச் சேர்ந்த அஞ்சலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகிய மாணவியர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றனர். ஆனால் அவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் மாநில தரவரிசையில் இடம்பெறவில்லை. முன்னதாக இத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவர்கள் தேர்வெழுதியதில் 9 லட்சத்து 5 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சியடைந்தனர்.

About ulagaarivumaiyam

மனிதனாய் வாழ்... மனிதனாய் வாழ விடு ...

Posted on 05/12/2013, in இஸ்லாம், கல்வி and tagged , , , , , , . Bookmark the permalink. Leave a comment.

Leave a comment

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing