Category Archives: உளவியல்

உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.

குடிப்பழக்கத்தை நிறுத்த முடிவதில்லை ஏன்?


Anti Alcohol Ads

Anti Alcohol Ads

குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கமாக இருந்தாலும் உடனடியாக நிறுத்துவது என்பது சற்று கடினமான விஷயம் தான் . மேலும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு அதிகம் நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.  இதே போல  டீ குடிப்பது , புகை பிடிப்பது போன்ற பழக்கங்களை நிறுத்துவதென்பது கூட சற்று கடினமான ஒன்றுதான். பொதுவாக நாம் நம்முடைய மூளை மற்றும் மனதின் அனுமதியுடன் ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கங்கள் , நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது. அந்த தூண்டுதல்களுக்கு பழப்பட்டுவிட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது. எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவன்றால் , தன்னம்பிக்கை இருந்தால் நமது நரம்பு மண்டலத்தையும் கட்டுபடுத்த முடியும் என்பதே உண்மை .

 

தற்கொலை சட்ட விரோதம் – புதிய மன நல மசோதா


suicide symptoms

suicide symptoms

தற்கொலையை சட்ட விரோதம் என கருதுவதை தடுக்கும் புதிய மனநல மசோதா  மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மசோதா மூலம் மனநல கவனிப்பை அனைவருக்கும் தரும் உரிமையை அளிக்கும்.முதன் முறையாக நாட்டில் கிரிமினல் சட்டம் சீரமைப்பு தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள மனநல கவனிப்பு மசோதா 2013 தற்கொலையை சட்டவிரோதம் என கூறும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்கொலைக்கான முயற்சிப்போரின் மனநலம் கருத்தில் கொள்ளப்படும். இந்த மசோதா நிலைப்படி தற்கொலை என்பது கிரிமினல் செயல்பாடு அல்ல.  தற்கொலை முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படும்.  தற்கொலை சட்ட விரோதமானது என கூறும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 309 ல் தற்போதைய மசோதா விலக்குஅளிக்கும்.தற்போதைய மசோதாபடி தற்கொலை முயற்சியும் மனநல ஆரோக்கியமும் ஒன்றிணைத்து பார்க்கும் நிலையை அளிக்கும். இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது .

psychology treatments

psychology treatments

 

தற்கொலை முயற்சி மேற்கொள்பவர்களின் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இந்த மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக அரசு மனநல சட்டத்தில் உரிமை சார்ந்த அணுகு முறையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2008ம்ஆண்டு மே மாதம் 3ம் தேயின்று குறைபாடு நபர்கள் உரிமையை மனநல சட்டத்தில் ஒன்றிணைக்க ஐ.நா. கூடுகையில் இந்தியா கையெழுத்திட்டது அதனைத்தொடர்ந்து தற்போது இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய மசோதாப்படி , மனநல நேயாளிகளுக்கு மின்சார சிகிச்சைஅளிப்பது, சங்கிலியால் பிணைத் தல் மற்றும் தலையை மொட்டை அடித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் அங்கீகாரமற்ற மன நல மையம் நடத்துபவர் களுக்கு ரூ 50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing