Category Archives: கடந்த கால பயனம்

கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

கடந்த கால பயணம் – ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்…


சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி . சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது.
ஸமூது (கூட்டத்தினர்) வாழ்ந்த குகை வீடுகள் :

cave house of Samud people

cave house of Samud people

இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.” அல்குர்அன் 11:61

cave house of Samud people

cave house of Samud people

(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள். அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அல்குர்ஆன் 15:80-82

cave house of Samud people

cave house of Samud people

பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) அல்குர்ஆன் 89:9

அவர்களுடைய பொது கிணறு :

well of Samud people

well of Samud people

பொது நிகழ்ச்சிகளுக்கு ஸமூது கூட்டத்தினர் பயன்படுத்திய அரங்கம் :

  Auditorium Samud people

Auditorium Samud people

அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அல்உலா அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன :

auditorium_thing

auditorium_thing1
ஸமூது கூட்டத்தினர் ஒன்பது வன்முறை கூட்டத்தினர்களாக இருந்து பல தெய்வ வணக்கம் செய்தல், கொள்ளை அடித்தல், அக்கிரம செயல்கள் புரிதல் போன்றவைகளில் பரவலாக ஈடுபட்டனர். அப்பொழுது அல்லாஹ் அதிசயமான உருவத்துடன் ஒரு ஒட்டகத்தை படைத்து அவர்களிடையே நடக்க செய்தான். அவ்வொட்டகத்தை எந்த ஒரு துன்பமும் செய்யாமலிருக்க கட்டளையிட்டான்.

அல்லாஹ் அனுப்பிய ஒட்டகம் தண்ணீர் குடித்த இடம் என்று நம்பப்படுகிறது :

It is believed to be the place where Allah's Camel drank the water

It is believed to be the place where Allah’s Camel drank the water

அவர்கள் இறையானைக்கு சவால் விட்டு அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள். அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கியது.

“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர். அல்குர்ஆன் 11:64-67

கடந்த கால பயணம் – ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்…


ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.

The lost city of Ubar

The lost city of Ubar

திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.

“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
ஆது சமுதாயத்தினர் பயன்படுத்திய கிணறு :

Aadu Life

Aadu Life

இக்கிணற்றில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது.

மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள் :

aadu_things
aadu_things

சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும் தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும் பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். அல்குர்ஆன் 69:6-7

இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.

கடந்த கால பயணம் – நூஹ் அலைஹி வஸ்ஸலாம்…


இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

“நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”

அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.

அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. அல்குர்ஆன் 11:36 – 44

இராக்கில் ஹூபாவில் உள்ள இந்த இடத்தில் வைத்துதான் அந்த கப்பல் கட்டப்பட்டது என்பது பலமான கருத்தாகும்.

Sumerian Statues

Sumerian Statues

சுமேரிய மக்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகள்.

Hooba Masque

Hooba Masque

வரலாற்று சிறப்புமிக்க ஹூபா பள்ளிவாசல்.

நூஹ் நபியின் கப்பல் சென்று தங்கிய மலைப்பகுதி துருக்கி நாட்டில் குர்திஸ்தான் என்ற நகரத்தின் வடக்கு பகுதியிலிருந்து பார்க்கும் போது ஆறாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் இருக்கிறது.

indiachezmoi blog

Things We Like About India

this is... The Neighborhood

the Story within the Story

Street Photography

Straßenfotografie • Beobachtungen am Wegesrand

Bucket List Publications

Indulge- Travel, Adventure, & New Experiences

jrad47.wordpress.com/

.......is writing